காவிரியில் 2.5 டி.எம்.சி என்ற அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

Update: 2024-05-17 05:00 GMT

Cauvery 

காவிரி ஒழுங்கற்று குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 3.8 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டுள்ளது என்றும் மீதம் 6.2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது என்றும், ஜூன் மாதம் கர்நாடகா அரசு 9.17 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் அதனையும் கால தாமதம் இன்றி திறக்க கோரி தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். பின்னர் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதியாக, காவிரியில் மே மாத இருப்புப்படி 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

Similar News