கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
By : King24x7 Rafi
Update: 2024-05-15 05:18 GMT
Con
கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. சென்னையில் தொடர்ந்து சில நாட்களாக 100 டிகிரி வெயில் வாட்டி வந்தது. இதனால் பகல் 11 மணிக்கு மேல் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் இன்னமும் குறையவில்லை.