சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!
By : King24x7 Rafi
Update: 2024-05-16 05:22 GMT
Crainc
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மெரினா, பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருமருகல், பரவை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சிக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் அதிகாலை லேசான மழை பெய்தது. சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.