மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசமும், ஐ.ஜ.தளமும் பாஜகவை நிர்பந்திப்பதாக தகவல்
மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. மக்களவை சபாநாயகர் பதவியை தங்களுக்கு தர தெலுங்கு தேசமும், ஐ.ஜ.தளமும் பாஜகவை நிர்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்குதேசமும், ஐக்கிய ஜனதா தளமும் ஆதரவு அளித்தால் மட்டுமே பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும். எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சபாநாயகர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. 2 முறை பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாஜக சபாநாயகர் பதவியை விட்டுத்தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.