மிசோரம் மாநிலத்தின் அய்ஸால் பகுதியில், ரெமல் புயல் காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு!
By : King24x7 Rafi
Update: 2024-05-29 05:37 GMT
Land
மிசோரம் மாநிலத்தின் அய்ஸால் பகுதியில், ரெமல் புயல் காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் மாயமான நிலையில், கனமழை அங்கு தொடர்வதால் மீட்புப் பணிகளில் தொய்வு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரெமல் புயல் காரணமாக மிசோரம் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ரெமல் புயலால் இன்று காலை 6 மணியளவில் தலைநகர் ஐஸ்வால் அருகே மெல்தாம் மற்றும் ஹ்லிமென் எல்லையில் ஒரு கல் குவாரி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐஸ்வால் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.