ஈரானின் புதிய உச்ச தலைவராக அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு: அதிரடிக்கு பெயர் பெற்றவர்!!
By : King 24x7 Angel
Update: 2024-11-18 07:16 GMT
iran
ஈரானின் உச்ச தலைவராக அலி கமேனியின் 2வது மகன் மொஜ்தபா தேர்வு ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் உச்ச தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விடவும் அதிகாரமிக்கதும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கப்படும் பதவியும் ஆகும். தற்போதைய ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ரகசிய ஆலோசனை கூட்டத்தில் தனது 2வது மகன் மொஜ்தபாவை அலி கமேனி உச்ச தலைவராக தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.