2ம் கட்ட மக்களவை தேர்தல்: அதிக வாக்குப்பதிவு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது; பிரதமர் மோடி பதிவு
By : King24x7 Rafi
Update: 2024-04-26 05:33 GMT
எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி - “இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரையும் சாதனை எண்ணிக்கையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிக வாக்குப்பதிவு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வாக்கு உங்கள் குரல்” என்று தெரிவித்து உள்ளார்.