பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்; அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்!
By : King24x7 Rafi
Update: 2024-05-06 05:13 GMT
Magesh
அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில் கூறியதாவது;பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் http://tnresults.nic.in மற்றும், http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இத்தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல! கற்றலை அளவீடு செய்வதற்கான தேர்வு முடிவுகள் மட்டுமே என்பதை மாணவச் செல்வங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். என்று பதிவிட்டுள்ளார்.