முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது: பாமக தலைவர் அன்புமணி
By : King24x7 Rafi
Update: 2024-06-23 05:20 GMT
neet
முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். “மாணவர்களின் நலனையும், மனநிலையையும் சிறிதும் உணர்ந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள முடிவு கண்டிக்கத்தக்கது. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு முடிவால் மாணவர்கள் அனுபவித்த துயரமும், அவதியும் விவரிக்க முடியாதவை” என அன்புமணி தெரிவித்துள்ளார்.