என்னுடைய மகனையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்: ரேபரேலியில் சோனியா காந்தி உருக்கம்
By : King24x7 Rafi
Update: 2024-05-18 05:25 GMT
Ragul
சோனியா பேசுகையில்,‘‘இந்திரா காந்தியின் இதயத்தில் முக்கிய இடம் பெற்றது ரேபரேலி தொகுதி ஆகும். இந்திரா காந்தியும், ரேபரேலி மக்களும் எனக்கு கற்று கொடுத்த பாடங்களை தான் ராகுலுக்கும்,பிரியங்காவுக்கும் கற்று கொடுத்தேன். அனைவரையும் மதிக்கவும், பலவீனமானர்களை பாதுகாக்கவும், மக்களின் உரிமைகள் மற்றும் அநீதிக்கு எதிராக போராடவும் பயப்பட வேண்டாம் என்பதை சொல்லி கொடுத்துள்ளேன். இங்கு உள்ள மக்கள்தான் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளனர். 20 ஆண்டுகள் இந்த தொகுதி எம்பியாக பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. நீங்கள் என்னை உங்களுடையவராக கருதுகிறீர்கள். சகோதர, சகோதரிகளே என் மகனையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவர் நிச்சயம் உங்களை ஏமாற்ற மாட்டார்’’ என உருக்கமாக பேசினார்.