நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்
By : King24x7 Rafi
Update: 2024-06-16 05:20 GMT
Rail
நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் ஆன நிலையில், அலங்கரித்த மலை ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 1899ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மலை ரயில் முதன்முறையாக தொடங்கப்பட்டது. நேற்றுடன் 125வது ஆண்டானதை கொண்டாடும் வகையில் குன்னூர் ரயில் நிலையத்தில் மலை ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலைகளில் தவழ்ந்து வந்த மலை ரயில் அலங்கரிக்கப்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது. பின்னர், ரயில் நிலையத்தில் கேக் வெட்டி 125வது ஆண்டு மலை ரயில் தினம் கொண்டாடப்பட்டது.