நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்
By : King24x7 Rafi
Update: 2024-06-18 05:26 GMT
சரக்கு ரயில் ஓட்டுநருக்கும் சிவப்பு சிக்னலை கடக்க டிஏ 912 அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஆவணங்கள் மூலமாக உறுதியாகி உள்ளது. எனவே ரயில் ஓட்டுநர் மீது தவறில்லை, சிக்னல் கோளாறு தான் விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. அதே சமயம், விசாரணை நிலுவையில் இருக்கும் போது ரயில்வே வாரியம் ஒட்டுமொத்த பழியையும் சரக்கு ரயில் லோகோ பைலட் மீது போடுவது ஆட்சேபனைக்குரியது என இந்திய ரயில்வே லோகோ ரன்னிங்மேன் அமைப்பின் செயல்தலைவர் சஞ்சய் பந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.