தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து
By : King24x7 Rafi
Update: 2024-07-27 05:56 GMT
rail
தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான மின்சார ரயில்கள் ரத்து. தாம்பரம் ரயில்வே பணிமனை, ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள். மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள், பணிக்கு செல்வோர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக கூடுதல் பேருந்துகளை இயக்க பயணிகள் வலிவுறுத்தியுள்ளனர்.