சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 43.43 சதவீதம் நீர் இருப்பு
By : King24x7 Rafi
Update: 2024-06-18 05:20 GMT
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 43.43 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 116 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 43 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,922 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 179 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 156 கன அடியாக சரிந்துள்ளது.