நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற அறிவுறுத்தல்!!
By : King24x7 Rafi
Update: 2024-05-18 05:09 GMT
Ship
கப்பல் போக்குவரத்து தொடங்கும் என 3 முறை தேதி அறிவித்தும் கப்பலை இயக்க முடியவில்லை. பழைய கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது.அதனை சரி செய்தால் மட்டுமே கப்பல் போக்குவரத்துக் கழகம் உரிய அனுமதி வழங்கும். மேலும் தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதிமுறைகள், காலநிலை மாற்றங்களால் மறு தேதி அறிவிக்காமல் கப்பல் சேவை ஒத்திவைக்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த கப்பல் சேவையை ஒன்றிய அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.