திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
By : King24x7 Rafi
Update: 2024-03-14 05:22 GMT
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார்.
முதல்வரின் கடிதத்துக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று மாலை வரை எந்த பதிலும் கூறப்படவில்லை. இதற்கிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை 6.50 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.