இலவச அரிசி வழங்கும் பைகளில் பிரதமர் மோடியின் படத்தை அச்சிடுவதற்கு ஒன்றிய அரசு ரூ.15 கோடி செலவு!!
By : King24x7 Rafi
Update: 2024-03-02 06:35 GMT
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இலவச அரிசி வழங்கும் பைகளில் பிரதமர் மோடியின் படத்தை அச்சிடுவதற்கு ஒன்றிய அரசு ரூ.15 கோடி செலவிட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது. நாடு முழுவதும் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இத் திட்டத்தில் தானியங்களை வழங்குவதற்கு பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்ட பைகளை வாங்குவதற்காக ராஜஸ்தான், சிக்கிம், மிசோரம், மேகாலயா, திரிபுரா, மாநிலங்களில் உள்ள இந்திய உணவு கழகத்தின் மண்டல அலுவலகங்கள் ரூ. 15 கோடிக்கு ஒப்பந்த புள்ளிகளை இறுதி செய்துள்ளன.