அவுட் காய் வெடித்ததில் மாட்டின் வாயில் பலத்த காயம்

தாளவாடி அடுத்துள்ள திகினாரை பகுதியில் காட்டு பன்றி வேட்டைக்காக வைத்த அவுட் காய் வெடித்ததில் மாட்டின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-03-08 09:07 GMT

அவுட் காய் வெடித்ததில் மாட்டின் வாயில் பலத்த காயம் காட்டு பன்றி வேட்டைக்காக வைத்த அவுட் காய் வெடித்ததில் மாட்டின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள திகினாரை பகுதியைச் சேர்ந்த வ விவசாயி தனது தோட்டத்தில் பசுமாடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இந்த மாடு தினசரி மேய்ச்சலுக்கு சென்று மீண்டும் மாலை தோட்டத்திற்கு வருவது வழக்கம்.ஆனால்,ஒரு பசு மாடு மட்டும் மேய்ச்சலுக்கு சென்று திரும்ப வரவில்லை.

Advertisement

இதைத்தொடர்ந்து தனது பசு மாட்டை பல்வேறு பகுதிகளில் தேடினார். இந்தநிலையில் அவரது பசு மாடு வாயில் பலத்த காயங்களுடன் வனப்பகுதி அருகே நின்று கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து பசுமாட்டு வாயில் காட்டு பன்றிக்கு வைக்கப்பட்ட அவுட் காய் வெடித்து படுகாயம் அடைந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே அவுட் காயை கடித்த பசு மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சேதமடைந்த வீடியோ காட்சிகள் சமூக வளைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. |

Tags:    

Similar News