வேலூரில் மன்சூர் அலிகான் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
வேலூர் மக்களவை தொகுதி சுயேட்சை வேட்பாளர் மன்சூர் அலிகான் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-08 14:59 GMT
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அலுவலகம் உள்ளது.அந்த அலுவலகத்திலிருந்து இன்று டோல்கேட் உழவர் சந்தைக்கு வாக்கு சேகரிக்க சுயேட்சை வேட்பாளர் மன்சூர் அலிகான் காரில் வந்தபோது தேர்தல் பறக்கும் படையினர் காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் மேற்கொண்ட சோதனையில் பணம் பரிசுப் பொருட்கள் ஏதும் கைப்பற்றப் படவில்லை.மேலும் இது வழக்கமான சோதனை தான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.