திருவாடனை அருகே கோயில் நகைகள் கொள்ளை
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே கோயிலின் பூட்டை உடைத்து சாமி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King Editorial 24x7
Update: 2023-11-04 11:18 GMT
கோயிலின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே கோயிலின் பூட்டை உடைத்து சாமிக்கு அணிவித்திருந்த 1.25 சவரன் தாலி, இரு கண் மலர்கள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் மர்ம நபர்கள் அரங்கேற்றிய இந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்து திருவாடனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.