- Home
- /
- ஷாட்ஸ்

தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,260-க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு சவரன் ரூ.90,080-க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையும் நேற்று கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.177-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அறிவித்த நேரத்துக்கு விஜய் வராததே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம் என உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக 5 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்; விஜய் பகலில் வருவதாக கூறியதால் காலை 7 மணி முதலே பொதுமக்கள் காத்திருந்தனர். சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது காவல்துறை அதிகாரிகளை சந்தேகிக்க தேவையில்லை. கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் இன்று வரை செல்லவில்லை. கரூர் நெரிசல் வழக்கில் விஜய் இன்று வரை சேர்க்கப்படாத நிலையில் ஆறுதல் கூற அவர் செல்லவில்லை. பொதுக்கூட்டம் தொடர்பான நெறி முறைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி விசாரித்ததால் மதுரை அமர்வு அதை எடுக்கவில்லை. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நாங்கள் எந்த அதிகாரிகளையும் பரிந்துரைக்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரூ.2,700 கோடி வாங்கிக் கடன் மோசடி பற்றி ஸ்ரீ கணேஷ் ஜீவல்லர்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். ஸ்ரீ கணேஷ் ஜீவல்லரிக்கு சொந்தமாக கொல்கத்தாவில் உள்ள 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஐதராபாத் மற்றும் அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ கணேஷ் ஜீவல்லரியிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.

சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து 2 வாரத்தில் அறிக்கை தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு பற்றி விசாரித்து வரும் எஸ்.ஐ.டி. ஊடகம் முன்பு பேச ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மேலும், தங்க மோசடி குறித்து வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க ஏடிஜிபி வெங்கடேஷுக்கு உத்தரவிட கேரள டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரூர் நெரிசல் சம்பவத்தில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு தடை கோரிய தவெக மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. எஸ்.ஐ.டி. விசாரணையை எதிர்த்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மனு, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்தது. தேர்வை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வுக்கு தயாராக முடியவில்லை என கூறி விண்ணப்பதாரர்கள் வழக்கு பதிவு தொடர்ந்தனர். விண்ணப்பித்த 2 லட்சம் பேரும் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டன என அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு வாதத்தை பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது.

தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு மோப்ப நாயுடன் சென்ற போலீசாரும், வெடிகுண்டு செயழிலப்பு நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. மிரட்டல் வந்தது புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில்,விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெயர் முகமது சபிக் என தெரியவந்துள்ளது. அதுபோன்று இன்று மதுரை விமான நிலையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ 25 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக சார்பில் மனமார்ந்த வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாதுர்யம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும், தேசத்திற்கு நேர்மையுடன் சேவை செய்வதற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் புத்த மதத்துக்கு மாறிய பட்டியல் பிரிவினருக்கு SC சான்றிதழ் வழங்க அம்மாநில அரசு உத்தரவு. பட்டியல் வகுப்பில் உள்ள 101 பிரிவுகளில், எந்த பிரிவை சேர்ந்தவர் புத்த மதத்துக்கு மாறினாலும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள் இதை உடனடியாக பின்பற்ற வேண்டும் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு யாருடன் போராடப் போகிறது என்ற ஆளுநரின் கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பதில் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன்தான் தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கிறது. திமுக இருக்கும் வரை அநீதிக்கு எதிராக தொடந்து போராடிக் கொண்டுதான் இருக்கும். தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்துள்ளது ஏன் தெரிவித்தார்.

குற்றாலம் அருவியில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. என்ன வசதிகள் தேவை என்பது குறித்து வழக்கறிஞர் ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 உயர்ந்துள்ள போதிலும் வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் ரூ.167-க்கு விற்பனையானது மக்கள் மனதில் சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தன்நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியே வர விஜய்க்கு பயம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “குற்றம் புரியவில்லை என்றால் தைரியமாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம். தன்நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியே வர விஜய்க்கு பயம். விஜய், பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சென்று பார்க்க முடியாமல் வீடியோ காலில் பேசி வருகிறார்" என்றார்.

மதுரையில் யானை தந்தத்தை விற்க முயன்றதாக இடைத்தரகர்கள் 5 பேரை வனத்துறை கைது செய்தனர். போடி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த வடமலை ராஜபாண்டியன் என்பவரின் யானை தந்தத்தை விற்க முயற்சி செய்யப்பட்டது. வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மதுரை வளர்நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டது. 5 பேரை பிடித்து வனத்துறை விசாரணை நடத்தியதில் யானை தந்தத்தை விற்க முயன்றது அம்பலம் ஆனது.







