கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சியை அரசு அதிகாரிகள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்;

Update: 2024-05-17 07:13 GMT

 மலர் கண்காட்சி துவக்கம் 

. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மே மாத சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக நகரின் மைய பகுதியில் உள்ள பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுவது வழக்கம், இந்நிலையில் இந்த ஆண்டு முதன் முறையாக 61-வது மலர் கண்காட்சி இன்று (17 ஆம் தேதி )துவங்கி 10நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

மேலும் பிரையண்ட் பூங்காவில் கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் நாற்றுகள் மூன்று கட்டங்களாக நடவு செய்யப்பட்டு தற்போது பல வண்ணங்களில் பல வகைகளில் பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றது, மேலும் மலர்களால் ஆன சேவல், மயில், 360 டிகிரி செல்ஃபி பாயிண்ட், வீடு, பொம்மைகள், நெருப்பு கோழி,காய்கறிகளில் டிராகன்,கொரிலா,டெடி பியர் உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மலர் கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அபூர்வா மற்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் தோட்டக்கலை துறை அரசு அதிகாரிகள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.மேலும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மேலும் இந்த மலர்கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இந்த வருடம் மலர் கண்காட்சிக்கு 10 நாட்கள் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News