நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்

தூத்துக்குடியில் நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக பேரூரணி சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கைதி, தப்பியோடியதால் பரபரப்பு உண்டானது.

Update: 2024-01-09 09:17 GMT

தூத்துக்குடியில் நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக பேரூரணி சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கைதி, தப்பியோடியதால் பரபரப்பு உண்டானது. 

தூத்துக்குடி; கொலை வழக்கில் தொடர்புடைய பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் செல்வ சதீஷ் என்ற சூப்பி இவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜர் படுத்துவதற்காக இன்று போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது அவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பிடத்திற்கு செல்வதாக உள்ளே சென்றவர். அங்கிருந்த ஜன்னல் வழியாக ஏறி குதித்து பின்புறம் உள்ள முட்புதர் வழியாக தப்பிச் சென்றார். இதைத்தொடர்ந்து கழிப்பறை சென்ற கைதி செல்வ சதீஷ் வெகுநேரமாகியும் வெளியே வராததை தொடர்ந்து பாதுகாப்புக்கு சென்ற போலீசார் கழிப்பறை கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது கைதி தப்பி ஓடிய சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதை தொடர்ந்து கைதியை அழைத்து வந்த போலீசார் அவரை தேடி வருகின்றனர். இவர் கடந்த 7-5- 2022 அன்று தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் சிங்கம் படப்பிடிப்பு நடத்தப்பட்ட காவல் நிலையத்தில் நண்பர்களுடன் மது அருந்தும் தகராறில் நண்பர் பிரபு என்பவரை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் செல்வ சதீஷ் என்ற சூப்பி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த கைதி காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்து கழிப்பறை வழியாக தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News