இருசக்கர வாகன விபத்து: இரண்டு பேர் பலி
இருசக்கர வாகன விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24x7 Website
Update: 2023-10-28 05:40 GMT
இருசக்கர வாகன விபத்து
காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன், 49. கனரக வாகனம் பழுது பார்ப்பவர். அவர் கடையில், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், 17, என்பவர், வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும், ஆற்பாக்கம் பகுதியில் பழுதாகி நின்ற லாரியை சரிசெய்து விட்டு, வீட்டுக்கு, 'ஹீரோ பேஷன்' இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். பின்னால் ஆனந்தன் அமர்ந்து இருந்தார். காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியைச் சேர்ந்த 'ஏசி' மெக்கானிக் யோகமூர்த்தி, 22 என்பவர், எதிரில் 'அப்பாச்சி' இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஓரிக்கை பாலாற்று பாலத்தில், இரண்டு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், ஆனந்தன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த யோகமூர்த்தி மற்றும் சதீஷ்குமார், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, இரவு 11:00 மணிக்கு யோகமூர்த்தி, இறந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சதீஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.