ஏ.சி சண்முகம் வேட்புமனு தாக்கல் - விறுவிறுப்பாகும் தேர்தல் களம் !
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-25 11:38 GMT
ஏசி சண்முகம்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் பாஜக வேட்பாளராக இன்று வேலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வீட்டுமனை தாக்களின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் லிட்டர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். வேட்பாளர் ஏசி சண்முகத்திற்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் வேட்பு மனு தாக்கலின் போது நான்கு பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டனர். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் வேலூர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது நிர்வாகிகள் சிலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.