Ajith: மருத்துவமனையில் அஜித் - பதறும் ரசிகர்கள்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி.;

Update: 2024-03-07 11:00 GMT

அஜித் மருத்துவமனையில் அனுமதி

Ajith: நடிகர் அஜித் திடீரென அப்போலோ மருத்துவமனைக்கு சென்றதால் அவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றது.

தமிழ் சினிமாவில் நீயா, நானா என போட்டிப்போட்டு கொள்ளும் அளவுக்கு ரசிகர்களை கொண்டவர்கள் அஜித், விஜய் தான். இருவரும் வெவ்வேறு விதத்தில் நடித்தாலும், தல தான் பெஸ்ட்ன்னு அஜித் ரசிகர்களும், தளபதி தான் பெஸ்ட்ன்னு விஜய் ரசிகர்களும் போட்டிப்போடுவது வாடிக்கையான ஒன்று.

அந்த அளவுக்கு உயிரையும் கொடுக்கும் அளவுக்கு ரசிகர்களை கொண்டவர் தான் அஜித்குமார். திரைப்படத்தில் நடிப்பதையும் தாண்டி, பைக் ரேஸில் ஆர்வமாக இருக்கும் அஜித், உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வந்து தனது ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுப்பதும் உண்டு. அஜித்தின் புகைப்படம் ஒன்று லீக் ஆனாலே அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளும் ரசிகர்கள் டிரெண்டாக்காமல் விடுவதில்லை.

Advertisement

இந்த சூழலில் தான் துணிவு படத்தின் ரிலீசை தொடர்ந்து, மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித் நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் படப்பிடிப்பு தாமதமானதால் ரசிகர்கள் அப்செட்டில் இருந்து வந்தனர். விடாமுயற்சி அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், படத்தின் ஷீட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. விடாமுயற்சி படத்தின் ஷீட்டிங் இல்லை என்றால் தமிழ்நாட்டிற்கு வந்து குடும்பத்துடன் இருக்கும் அஜித் அண்மையில் தனது மகன் ஆத்விக்கின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் தான் நடிகர் அஜித்குமார் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மூளைப்பகுதியில் 'ஸ்டன்ட்' அதாவது 'ஸ்கிரீன்' வைக்கப்பட்டிருப்பதாகவும், கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு அஜித்தை நலம் விசாரித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த செய்தியால் அஜித்துக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவர் சாதாரண உடல் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு வந்ததாக, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதனால், அஜித்துக்கு ஒன்றும் ஆகவில்லை என்று ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். 

மகிழ்திருமேனி இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். 

Tags:    

Similar News