வசூல் ராஜா தான் அண்ணாமலை - ஜோதிமணி

Update: 2023-11-07 15:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி யாரிடமிருந்து பணத்தை வாங்கி வந்தார் என்பதெல்லாம் தெரியும். பெண் என்பதால் விட்டு வைக்கிறேன். பிழைத்துப் போகட்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று கரூரில் ஜோதிமணி தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணாமலை பற்றி அவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்தார்.

குறிப்பாக மணல் கொள்ளை மாபியாக்களிடம் இருந்து மாதம் 60 லட்சம் ரூபாய் பெற்றதாக அமலாக்கத்துறை சோதனையின் போது ஊடகங்கள் வாயிலாக வெளிப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள், பணத்தை பெற்றுக்கொண்டது பிஜேபி நிர்வாகி என தெரிந்தவுடன்,அது தொடர்பான விசாரணையை கிடப்பில் போட்டார்கள். கர்நாடகாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை கருப்பு ஆடாக மாறி, பிஜேபி கட்சிக்கு செய்த ஊழியத்தின் காரணமாக தான் ஒரே ஆண்டில் அவர் தமிழகத்தின் பிஜேபி கட்சியின் தலைவராக முடிந்தது எனவும் குற்றம் சாட்டினார்.

இவரைப் போன்ற ஊழல் பேர்வழிகள் என்னை போன்ற நேர்மையான அரசியல் செய்பவர்களை விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய 7500- கோடி ரூபாயை எடுத்து என்ன ஊழல் செய்தீர்கள்? இதற்கு வெள்ளை அறிக்கை கொடுக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய அண்ணாமலை, தன்னை நேர்மையானவர் எனச் சொல்லிக் கொள்வதால் உண்மையாகவே, நேர்மையாக பணியாற்றும் காவல் அதிகாரிகளை அசிங்கப்படுத்துவதற்கு சமமாகும் என்றும், தன்னைப் பற்றி உருட்டல், மிரட்டல், பிச்சை போடுகிறேன் என என்னிடம் பேச கூடாது என்றும், வரும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்றும், அப்போது அண்ணாமலை செய்த ஊழல்கள் அனைத்தையும் நாங்கள் அம்பலப்படுத்துவோம்.அன்று அண்ணாமலை இருக்கும் இடம் வேறாக இருக்கும் எனவும் எச்சரித்தார்.

Tags:    

Similar News