அவ்வையார் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
தமிழக சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு, 'அவ்வையார்' விருது, தமிழக முதல்வரால், 2024 மார்ச் மாதம், உலக மகளிர் தின விழாவில், வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, கலை, அறிவியல், கலாசாரம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில்,
இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், நவ., 20க்குள், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பித்த பின், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில், விண்ணப்பங்களின் இரு பிரதிகள் வழங்க வேண்டும் என,காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்."