வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் - வருவாய் ஆய்வாளர் கைது
திருப்பூர், நல்லூரில் வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ. 2000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-05-29 08:23 GMT
திருப்பூர் அருகே உள்ள நல்லூரில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மைதிலி. இவர் வாரிசு சான்றிதழ் பெற அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.இன்று நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் காத்திருந்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் இருந்து மைதிலி பணத்தை பெற்ற போது, அங்கு மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக மைதிலையை பிடித்து கையும் களவுமாக மைதிலையை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.