பைக்கின் சீட்டை உடைத்து பணம் கொள்ளை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ். இந்தப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு டீ மற்றும் உணவுகளை சப்ளை செய்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தேரடி வீதியில் உள்ள கனரா வங்கிக்கு சென்று ரூ 2,60,000 ஆயிரம் ரூபாய் பணத்தை கணக்கில் இருந்து எடுத்துக் கொன்று ஸ்கூட்டி வண்டியின் சீட்டுக்கு கீழே வைத்து பூட்டிவிட்டு தன்னுடைய நண்பர்களை சந்திக்க வட்டாட்சியர் அலுவலகம் சென்று வண்டி நிறுத்திவிட்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் வண்டியை எடுக்க வந்த போது பின் சீட்டின் லாக்கர் உடைந்து கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சீட்டை தூக்கி பார்க்கும் போது அதில் வைத்து இருந்த 2 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனதை கண்டு ஶ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார்.
அந்தப் புகாரை தொடர்ந்து விரைந்து வந்த தாலுகா காவல்துறையினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுற்றி கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை செய்ததில் பணத்தைக் கொள்ளையடித்த நபர் யாரும் கண்ணில் தென்படவில்லை. பின்னர் அந்தப் பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.