சிபிஎஸ் சி தேர்வு முடிவுகள் வெளியீடு - சென்னை மூன்றாமிடம்.
சிபி எஸ் சி தேர்வில் அகில இந்திய அளவில் சென்னை மூன்றாமிடம் பிடித்துள்ளது.ஒட்டு மொத்தமாக தமிழக அளவில் 87.98 தேர்ச்சி சதவீதம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.65 % அதிகமாகும்.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு 2023 மற்றும் 24 ஆம் கல்வி ஆண்டுக்கு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் இரண்டாம் தேதி வரை நடைபெற்றது. ஒட்டு மொத்தமாக 87.98 தேர்ச்சி சதவீதம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.65 % அதிகம். மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தளம் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம்.
அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதம் , திருவனந்தபுரம் 99.91% முதலிடம் பெற்றுள்ளது. விஜயவாடா 99.04% இரண்டாமிடம் பெற்றுள்ளது. சென்னை 98.47 % மூன்றாமிடம் பெற்றுள்ளது. பெங்களூர் 96.95% அனைத்துப் பாடங்களிலும் ஆண்களை விட பெண்கள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் - 85.12% பெண்கள் - 91.52 % மாற்று பாலினத்தவர் - 50% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் 88.23 % பேர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 91.42 % பேர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.