சாலை விபத்தில் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய ஆட்சியர் உமா

மாவட்ட ஆட்சியர் உமாவின் இந்த துரித நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Update: 2024-05-17 05:24 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நாள்தோறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று (17.5.24) ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ராசிபுரம் பகுதிகளுக்கு செல்லும் வழியில், நாமக்கல் - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மகுட்டைமேடு, லட்சுமி திருமண மண்டபம் அருகில் காலை சுமார் 10.15 மணியளவில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் விபத்தில் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவர்களை உடனடியாக மீட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவருடன் வந்த மற்றொரு அலுவலக வாகனத்தில் ஏற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆட்சியரே நேரில் இறங்கி வந்து உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை அங்குள்ளவர்கள் பாராட்டினர்.மாவட்ட ஆட்சியரின் இந்த துரித நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Tags:    

Similar News