மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர் சேதம் குறித்து குழு அமைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கனமழை, பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேளாண் இணை இயக்குனர் தலைமையில் குழு அமைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று பிற்பகலுக்கு மேல் துவங்கிய மழை 24 மணி நேரமாக பெய்து வருகிறது இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 11 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது மயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தண்ணீரை விரைந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவ மழையை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது ஏற்கனவே மழை இல்லாமல் ஆறுகள் காய்ந்திருந்த காரணத்தால் இந்த மழையின் காரணமாக பெரிய அளவில் தண்ணீர் தேங்க வில்லை, தொடர்ந்து மழை பெய்தால் மேற்கொள்ள வேண்டிய மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மழை காரணமாக பயிர்கள் ஏதாவது பாதிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேளாண் துறை இணை இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதவி கோரப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.