தேமுதிகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

தேமுதிக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு இன்று முதல் விருப்பமனு விநியோகிக்கப்படுகிறது

Update: 2024-03-19 05:31 GMT
நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுக உடன் கூட்டணி அமைக்க உள்ள நிலையில் தேமுதிக - விற்கு 04 தொகுதிகள் முதல் 05 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளனர்.. அந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு விருப்பமனு இன்று காலை 11:00 மணி முதல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வினியோகிக்கப்படுகிறது.. நாடாளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை நாளை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வியாழக்கிழமை காலை 10:00 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது
Tags:    

Similar News