நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை துவக்கியது தேமுதிக
பாஜ.,வுடன் கூட்டணி வைக்க தேமுதிக பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-விடம் தேமுதிக முதல் கட்டமாக 5 தொகுதிகள் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், விருதுநகர், தென் சென்னை உள்ளிட்ட தொகுதிகளை விருப்பப்பட்டியலாக வழங்க உள்ளதாக தகவல் தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது.
நாளை தேமுதி-வின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-வுடன், தேமுதிக கூட்டணி குறித்து உறுதி செய்ய, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 11 தேதி சென்னை வரும் நிலையில் அன்று கூட்டணி குறித்து உறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாக தேமுதிக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.