போதை பொருள் கடத்தல் வழக்கு : சென்னையில் அமலாக்கத்துறை சோதனை.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-09 03:38 GMT

சோதனை 

போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் இயக்குனர் அமீர், திமுக நிர்வாகி சிற்றரசு உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராயநகரில் உள்ள அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்தி மத்திய காவல் படையினர் உதவியுடன் சோதனை ஈடுபட்டு வருகிறார்கள்.

அதே போல் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து திமுக நிர்வாகி சிற்றரசு இல்லத்திலும் அயனாவரம் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஜே எஸ் எம் ரெசிடென்சி என்கிற ஹோட்டலில் இன்று காலை ஏழு மணி முதல் மூன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News