வேட்பு மனு தாக்கல் செய்த துரைமுருகனின் மகன்!

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-25 10:36 GMT

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தலைவர் சிலைகளுக்கு கதிர் ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாநகர மாவட்ட திமுக செயலாளர் கார்த்திகேயன், வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News