மதகு சரியில்லாததால் விவசாயிகள் வேதனை
மதகு சரியில்லாததால் டீசல் இயந்திரம் மூலம் நீரை பாய்ச்சும் விவசாயிகள்.;
By : King 24x7 Website
Update: 2023-10-26 02:19 GMT
பழுதடைந்துள்ள மதகு
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில், ஒன்றிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நிரம்பும் நீரை பயன்படுத்தி, கவுரியம்மன்பேட்டை, ஒழையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். ஆடி மாதத்திற்கு பின் விதைப்பு செய்த நெல், தற்போது கதிர் பிடிக்கும் சூழலில் உள்ளது. இந்த வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்கு ஏற்ப, மதகு வழியாக தண்ணீர் வெளியேற வசதி இல்லை. இதனால், விவசாயிகள் நீர் இறைக்கும் டீசல் இயந்திரத்தின் வாயிலாக தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி, மதகு வழியாக தண்ணீர் பாயும் அளவிற்கு வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஏரி சீரமைக்கும் போது, வடி கால்வாய் சவுகரியமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.