பேச்சு வார்த்தை தோல்வியால் தொடர் உண்ணாவிரத போராட்டம் !

கரூர் மாவட்டத்தில் பேச்சு வார்த்தை தோல்வியால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் மற்றும் விவசாயிகள்.

Update: 2024-02-29 10:23 GMT
பேச்சு வார்த்தை தோல்வியால் தொடர் உண்ணாவிரத போராட்டம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆண்டி செட்டிபாளையம் முதல் கரைதோட்டம் வரை அமைக்க உள்ள 110 கே.வி உயர் மின் கோபுர திட்டத்தில், நில மதிப்பு நிர்ணயம் செய்யவும் , அதன் பிறகு முழு பணத்தையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு செலுத்திய பிறகு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை 9:30-மணி அளவில் க.பரமத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக தென்னிலை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், க. பரமத்தி காவல் ஆய்வாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்காக அழைத்ததாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று காலை 10.00 மணி அளவில் விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தற்பொழுது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கரூர் மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் இந்த அமைப்பைச் சேர்ந்த கலையரசி ரவி ஆகியோர் சற்றுமுன் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.போராட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News