பைக் ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்

Update: 2023-11-14 15:09 GMT
பயனருக்கு ஹெல்மெட் கட்டாய முறை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கல்பாக்கம் அணுசக்தி தொழில்வளாக பகுதியில், இருசக்கர வாகன பயணியர், 'ஹெல்மெட்' அணிவதை கட்டாய நடைமுறைப்படுத்தி உள்ளனர். தற்காலத்தில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் வேகமாக செல்கின்றனர். விபத்தில் காயமடைந்து, உயிரிழக்கின்றனர். இப்பாதிப்பை தவிர்க்க, இருசக்கர வாகன பயணியர், 'ஹெல்மெட்' அணிவதை கட்டாயப்படுத்தி, உயர் நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. பெரிய நகர்ப் பகுதிகளில், போலீசார், இருசக்கர வாகன பயணியரை கண்காணித்து, 'ஹெல்மெட்' இன்றி ஓட்டுவோருக்கு, அபராதம் விதிக்கிறது.

இச்சூழலில், கல்பாக்கம், அணுசக்தி துறையினர், அவர்கள் வசிக்கும் நகரிய பகுதிகளிலிருந்து, சில கி.மீ., தொலைவு, அணுசக்தி தொழில்வளாக பகுதிக்கு செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில், பணிக்கு செல்வோர், 'ஹெல்மெட்' அணிந்தே வாகனம் ஓட்ட, தொடர்ந்து அறிவுறுத்தி, படிப்படியாக கட்டாய நடைமுறையாக மாற்றியது. துவக்கத்தில் குறைவானவர்களே, 'ஹெல்மெட்' அணிந்தனர். தொடர் கட்டாய நடைமுறை காரணமாக, தற்போது 'ஹெல்மெட்' அணிகின்றனர். ஒப்பந்த நிறுவன தொழிலாளர்களுக்கும், 'ஹெல்மெட்'டை கட்டாயப்படுத்த வேண்டும்." .

Tags:    

Similar News