சட்டவிரோத மணல் விற்பனை- ஐந்து ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு
சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் உட்பட ஐந்து ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
த மிழகத்தில் செயல்பட்ட மணல் குவாரிகளில், அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை பல்வேறு சோதனைகளை நடத்தியது. கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், அரியலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் செயல்பட்ட மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இ
தனை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது். தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.
சம்பந்தப்பட்ட கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் மீண்டும் சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டும் என கடந்த முறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ச் ஒன்றாம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆயினும் யாரும் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று வந்த போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் மதித்திருக்க வேண்டாமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினர். அப்போது ஆட்சியர்களிடம் தரவுகள் இல்லாத போது, ஆஜராவதில் பலன் இல்லை என்று வாதிட்ட தமிழ்நாடு அரசு,மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளாக உள்ளனர். 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
எனவே இந்த சம்மனை சற்று தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். நீதிமன்றம் இதனை ஏற்று, வரும் 25ஆம் தேதி கரூர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.