நகைக்கடை கொள்ளையன் விஜய் தந்தை தூக்கிட்டு தற்கொலை

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் தேடப்பட்டு வரும் விஜய் தந்தை சொந்த ஊரில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை

Update: 2023-12-07 06:35 GMT

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் தேடப்பட்டு வரும் விஜய் தந்தை சொந்த ஊரில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவையில் கடந்த மாதம் 28 ம் தேதி காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை போனது. 4.8 கிலோ தங்கம், பிளாட்டினம், வைரம் நகைகள் கொள்கையடிக்கப்பட்ட சம்பவத்தில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் விஜய் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டு 3.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. இதில் விஜய் மாமியார் யோகராணி கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 1.35 கிலோ தங்க,வைரt நகைகள் மீட்கப்பட்டது. இன்னும் 300 கிராம் முதல் 400 கிராம் நகைகள் மட்டும் மீட்கப்பட வேண்டி உள்ளது. 3 நாட்களில் கொள்ளையனை பிடித்து விடுவோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விஜயின் தந்தை முனிரத்தினம் கோவை தனிப்படை போலீசாருக்கு தகவல் ஒன்று அளித்துள்ளார். அந்த தகவலில் அவரது மகன் விஜய் தங்க பிரேஸ்லெட் தங்க செயின்கள் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்துவிட்டு உடனே சென்று விட்டதாகவும், அதை வந்து தாங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் என தகவல் கொடுத்ததின் பேரில் நேற்று கோவை தனிப்படை போலீசார் கம்பைநல்லூர் அருகே உள்ள தேவரெட்டியூர் கிராமத்திற்கு வந்த நிலையில் அவரது மகன் கொடுத்த நகையை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். அதன் பிறகு விஜய் தந்தை முனிரத்தினத்தை பல்வேறு பகுதிகளுக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளனர். பல்வேறு பகுதிகளில் விஜய் தேடிய நிலையில் அவரது தந்தையை கோவைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட பிறகு அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டதாக கூறப்பட்ட நிலையில் வீட்டிற்கு வந்த முனிரத்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கம்பைநல்லூர் போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முனிரத்தினம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News