கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் கரூர் மக்களவை தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-03-18 07:51 GMT

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், கரூர் நாடாளுமன்ற வேட்பாளராக இதுவரை யாரையும் எந்த கட்சியும் அறிவிக்கவில்லை. அதேசமயம் அதிமுக, பிஜேபி கட்சியிலும் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில் உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. இது தொடர்பாக கடந்த மார்ச் ஒன்பதாம் தேதி காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது இடங்கள், பாண்டிச்சேரியில் ஒரு இடம் என மொத்தம் பத்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியிடையே உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், தொகுதிகள் இறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான அறிவிப்புகள் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோரிடையே ஏற்பட்ட ஒப்பந்த அறிவிப்பு பொதுவெளியில் வெளியானது. அதில், கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News