அரூரில் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடுவோம்

அரூரில் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-12-31 13:53 GMT
புத்தாண்டு கொண்டாட்டம்

அரூர் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடுவோம் மது பாட்டில் வடிவில் கேக் தயாரித்து  விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு நாளை திங்கட்கிழமை  கொண்டாடப்படுகிறது.

ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில் தேவாலயங்கள், வீடுகள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களிலும் 'கேக்' வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி தங்களது மகிழ்வை வெளிப்படுத்துவது வழக்கம். 

புத்தாண்டு பண்டிகையில் கேக் முக்கிய பங்கு வகிக்கிறது.புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான   'கேக்' வகைகளை தயார் செய்யும் பணிகளில் பேக்கரி ஊழியர்கள்  ஈடுபட்டு வருகின்றன.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பேக்கரிகள் உள்ளன. ஒவ்வொரு பேக்கரியிலும் வித விதமான கேக்குகள் விற்பனைக்காக வந்துள்ளன.  தர்மபுரி மாவட்டம் அரூரில்  பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மதுவை குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டினால் விபத்து நிச்சயம் என்பதை உணர்த்தும் கிங்பிஷர் பீர் பாட்டில் வடிவில்  ஒரு கேக் டைமண்ட் கோல்ட் மது பாட்டில் வடிவில் ஒரு கேக் தயார் செய்து பேக்கரியில் வைத்துள்ளனர்.

இந்த பேக்கரிக்கு வரும் இளைஞர்கள் பெரியோர்கள், குடும்பத்தினர் அனைவரும் இந்த வடிவிலான கேக்கை பார்த்து எதற்காக  வைத்துள்ளீர்கள் என பேக்கரி உரிமையாளரிடம் கேட்டு சொல்கிறார்கள். வாடிக்கையாளர்களிடம் பேக்கரி உரிமையாளர் கூறும் போது, புத்தாண்டில் விபத்து இல்லாத புத்தாண்டாக வரவேற்கும் விதமாக, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பெரும்பாலான இளைஞர்கள் மதுவை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதில் முக்கிய பங்கு வைக்கின்றனர்.

மதுவை குடித்து விட்டு வாகனம் ஓட்டும்போது அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் எதிரே வரும் வாகனத்தில் வரும் நபர்களும் பாதிக்கப்படுகிறார்கள், இதனால் இரண்டு குடும்பங்களும் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இன்றைய இளம் தலைமுறையினர் புத்தாண்டு தினத்தில் மதுவை குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வகையிலான கேக்  தயார் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பார்வைக்கு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News