திரிசூலத்தில் சொகுசு கார் மோதி விபத்து
திரிசூலத்தில் சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்தனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-29 05:50 GMT
ஆட்டோ மீது கார் மோதல்
செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலத்தில் பிஎம்டபிள்யூ கார் மோதி 7 பேர் படுகாயம் அடைந்தனர். பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மீது மோதிய பிஎம்டபிள்யூ கார், சாலையை கடந்தவர்கள் மற்றும் ஆட்டோ மீதும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. சொகுசு கார் மோதியதில் கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ சேதமடைந்தது. கன்னியாகுமரியை சேர்ந்த நபர், சொகுசு காரில் நுங்கம்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை பிடித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.