மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் எருமப்பட்டி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-11-07 13:13 GMT
மாணவிக்கு பரிசோதனை செய்த போது எடுத்த படம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் எருமப்பட்டி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இணை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையிலும் எருமப்பட்டி ஒன்றிய குழு தலைவர் சங்கீதா முன்னிலையில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தொடக்க நிலை குமார் மாவட்ட திட்ட அலுவலர்கள் பங்கேற்று இலவச மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது முகாமில் வட்டார வளமைய மேற் பார்வையாளர் சிவகுமார் வரவேற்பு உரையாற்றினார்.

இம்முகாமில் பேரூராட்சி தலைவர் பழனியாண்டி துணைத்தலைவர் ரவி மற்றும் வார்ட் உறுப்பினர் உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை சிறப்பித்தனர் முகாமில் 70-க்கும் மேற்பட்ட மாற்று திறன் மாணவர்கள் கலந்து கொண்டனர் இவர்களில் புதிய அடையாள அட்டை ஏழு மாணவர்களுக்கும் அடவேட்டை புதுப்பித்தல் 6 மாணவர்களுக்கும் மற்ற மாணவர்கள் பொதுவான பரிசோதனை மேற்கொண்டு பயன்பெற்றனர்.

\முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பயிற்றுநர் கற்பகம் வட்டார சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாற்றுத்திறன் ரமேஷ் அவர்கள் ஆலோசனையின் படி செய்திருந்தனர் முகாமில் ஆசிரியர் பயிற்றுநர் பெரியசாமி நன்றி உரை ஆற்றினார்

Tags:    

Similar News