குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
கரூர் மாநகராட்சி 3-ம் மண்டல பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Update: 2024-04-14 02:14 GMT
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக காவிரி ஆற்றில் இருந்து பைப்லைன் அமைத்து குடிநீர் விநியோகம் சீராக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாநகராட்சி சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கரூர் மாநகராட்சி மண்டலம் 3-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பிரதான குழாய், புலியூர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரே உடைப்பு ஏற்பட்டுள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், அதனால் வார்டு எண் 15, 16, 38, 39, 40, 41 மற்றும் 42 பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் கால இடைவெளி 2- நாட்களுக்கும் அதிகமாகும் என்பதால், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.