நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் மாற்றம்

நாமக்கல் மக்களவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-22 01:43 GMT

ஈஸ்வரனுடன் மாதேஸ்வரன்

நாமக்கல் மக்களவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதி வேட்பளராக அந்த கட்சியின் சார்பில் சூரிய மூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார்.

அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே சாதிய ரீதியாக அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தலங்களில் பரவி வந்தது. இதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நாமக்கல் மக்களவை தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்திக்கு பதிலாக நாமக்கல் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநில பொது செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News