தொப்பூர் கணவாய் அருகே ரூ.775 கோடியில் புதிய ரோடு
தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துக்களை தடுக்கும் வகையில், ரூ. 775 கோடியில் புதிய சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Update: 2023-12-16 07:49 GMT
தர்மபுரி டிச.16: தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. டி.என்.வி செந்தில்குமார் தொடர் முயற்சியின் காரணமாக ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு சீரமைக்க ஒரு புதிய சாலை அமைக்க அனுமதி அளித்து அதற்கான ஏலம் அறிவிப்பினை ரு.775 கோடிக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.