ஆதி திராவிட நலத்துறை அலுவலகத்தில் அதிகாரி கையாடல்
By : King 24X7 News (B)
Update: 2023-11-05 09:42 GMT
கோப்பு படம்
சிவகங்கை ஆட்சியாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிட நல அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சீதாப்பிரியா. இவர் கடந்த 2017 முதல் 2023 வரை ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு அரசு ஒதுக்கிய ஒன்பது லட்சம் பணத்தை கையாடல் செய்துவிட்டு அதில் 5 லட்சத்தை திருப்பி செலுத்தியதாக கூறப்படும் நிலையில், மீதமுள்ள 4 லட்சத்தை கையாடல் செய்ததாக ஆதிதிராவிட நல அலுவலக சிறப்பு வட்டாட்சியர் உமா மகேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்